மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி வேலுமணி சந்திப்பு
எஸ்.பி வேலுமணி, நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சென்னை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சந்தித்து பேசினார். பாஜக- அதிமுக கூட்டணி தொடரும் என்று அமித்ஷா கூறியிருந்தார். பின்னர் இதே கருத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதிபலித்து இருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரான எஸ்.பி வேலுமணி, நிர்மலா சீதாராமனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக நிதி மந்திரி பாஜக மாநில தலைவர் அன்னாமலையையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story