முதலீடு திட்டத்தின் மூலம் இரட்டிப்பாக தருவதாக கூறிரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது


முதலீடு திட்டத்தின் மூலம் இரட்டிப்பாக தருவதாக கூறிரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:47 PM GMT)

முதலீடு திட்டத்தின் மூலம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் கே.கே.சாலை மணி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ரமேஷ் (வயது 52). இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனியார் இன்சூரன்ஸில் மேலாளராக பணியாற்றி வரும் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் (42) மற்றும் திருபுவனையைச் சேர்ந்த ஸ்டாலின் (47) ஆகிய இருவரும் அணுகி முதலீடு திட்டம் ஒன்று இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் 300 நாட்களுக்கு தினமும் ஒரு சதவீதம் பணம் திரும்ப பெறலாம் என்றும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய சுப்பிரமணி ரமேஷ், ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதேபோல் சுப்பிரமணி ரமேசின் நண்பர்கள் ஆன்டனி ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், திருஞானம் ரூ.6 லட்சமும், செந்தில்குமார் ரூ.6 லட்சமும், சுப்பிரமணி ரமேசின் மனைவி பத்மாவதியின் தோழியான சுகந்தி ரூ.7 லட்சத்து 46 ஆயிரமும், இவர்கள் உள்பட மேலும் சிலரிடம் இதுபோன்று மொத்தம் ரூ.40 லட்சத்து 26 ஆயிரத்தை ரவிக்குமார், ஸ்டாலின் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ரவிக்குமார், ஸ்டாலின் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.


Next Story