நாடாளுமன்றத்தில் செங்கோல்..! தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி - நடிகர் ரஜினிகாந்த் டுவீட்
பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். டெல்லியில் நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது. செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களை சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story