முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தகல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி கலெக்டர் சாந்தி தகவல்


முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தை சேர்ந்தகல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2023 7:30 PM GMT (Updated: 4 Oct 2023 7:30 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பிரதமர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் பிரதமர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி உதவித்தொகை

முன்னாள் படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாரத பிரதமர் கல்வி நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2023-2024 ம் கல்வி ஆண்டில் தொழில் கல்வி சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

பிளஸ்-2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. விவசாயம், கல்வியியல் பி.எட்., சட்டம் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளை படித்து வரும் மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்த உதவித்தொகையை தற்போது முன்னாள் படைவீரர்களின் மகளுக்கு ரூ.36 ஆயிரம், மகனுக்கு ரூ.30 ஆயிரம் என வழங்கப்பட்டு வருகிறது.

பயன்பெறலாம்

இந்த திட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் தொடக்கத்தில் முதலாம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தவறினால் அடுத்த கல்வி ஆண்டில் விண்ணப்பிக்க முடியாது. எனவே இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய முப்படை வீரர் வாரிய அலுவலகமான www.ksb.gov.in என்ற இணையதள முகவரியை பார்வையிட்டு உரிய விண்ணப்பித்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தற்போது படித்து வரும் கல்லூரியில் தகுதி சான்று, வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின் விண்ணப்பம் ஆகிய 3 படிவங்களை பூர்த்தி செய்து வருகிற நவம்பர் மாதம் 30- ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய முப்படை வீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து கல்வி உதவித்தொகையை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story