உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகை


உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகை
x

நாராயணி பீடம் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகையை சக்தி அம்மா வழங்கினார்.

வேலூர்

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் 700 மாணவ-மாணவிகளுக்கு வித்யாநேத்ரம் திட்டத்தின் கீழ் ரூ.1½ கோடி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஸ்ரீநாராயணி பீடத்தில் இன்று நடந்தது.

மாணவர்களுக்கு காசோலையை சக்தி அம்மா மற்றும் சிறப்பு விருந்தினர்களான சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் தங்ககோவில் இயக்குனரும், அறங்காவலருமான எம்.சுரேஷ்பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குனரும், அறங்காவலருமான பாலாஜி, ஸ்ரீநாராயணிபீட அறங்காவலர் சவுந்திரராஜன், மேலாளர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story