கோபி அருகே பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
கோபி அருகே பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
கடத்தூர்
கோபி அருகே பள்ளிக்கூட வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
பள்ளிக்கூட வாகனங்கள்
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் கோபி, சத்தி, பவானி, ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சொந்தமான 400 வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பள்ளிக்கூட வாகனங்களில் அவசரகால வழி உள்ளதா?, படிக்கட்டுகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளனவா?, நல்ல முறையில் இயங்கும் நிலையில் உள்ளதா? என்று அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
டிரைவர்களுக்கு அறிவுரை
மேலும் பள்ளிக்கூட வாகனங்களை இயக்கும் டிரைவர்களிடம் அதிக வேகமாக செல்லக்கூடாது. அதிக மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லக்கூடாது. பஸ்களில் உதவியாளர்களை வைத்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி முனுசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முத்துசாமி, கண்ணன், சுகந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜினி ஆகியோர் ஆய்வு பணியில் கலந்துகொண்டார்கள்.