பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை

பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை
x

பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை

கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்-2 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தொடர் மழை காரணமாக 3 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மாணவிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாய நிலை உள்ளது. எனவே பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றியும், பள்ளமான இடத்தில் மண் மூலம் சமன் செய்தும் பராமரிக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story