பள்ளி ஆண்டு விழா
பள்ளி ஆண்டு விழா நடந்தது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய்பிரகாஷ் வரவேற்று பேசினார். பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். அரசு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story