பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி ஒண்டர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

தென்காசி

தென்காசி திரவியநகர் ஒண்டர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) ராமசுப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஆசிரியை சுபலட்சுமி வரவேற்றார். பள்ளி முதல்வர் மகேஷ் கிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியின் தாளாளர் டாக்டர் செல்வி மாணவர்களின் நலன் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்து பேசினார். நிர்வாக இயக்குனர் டாக்டர் புதிஷ் ராகுல் சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நன்னடத்தை, தொடர் வருகை பதிவு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மழலையர்களுக்கான பட்டமளிப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ஜாஸ்மின், சிவபிரசாத் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் அருண் குமாரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் செல்வராஜ், தாளாளர் டாக்டர் செல்வி, நிர்வாக இயக்குனர்கள் புதிஷ் ராகுல், டாக்டர் வதன கிருபா மற்றும் பள்ளி முதல்வர் மகேஷ் கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.


1 More update

Next Story