பள்ளி ஆண்டு விழா

சாயர்புரத்தில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
சாயர்புரம்,:
சாயர்புரம் ஜாய் சாரோன் நர்சரி பிரைமரி பள்ளியின் 21-வது ஆண்டு விழா நடுவைக்குறிச்சியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் ப்ரீத்தி அசோகா தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் பிரபா முரளிதரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் பிரபாகுமார், ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் சங்கத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் ஜோசப், பள்ளி நிர்வாக அதிகாரி பிருத்திவிராஜ் அசோகா, தூத்துக்குடி சத்யா ஏஜென்சி உரிமையாளர் கிறிஸ்டி ஜான்சன், சின்னத்துரை அன் கோ.திருநாவுக்கரசு உள்பட பலர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், நாடகம், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.






