பள்ளிக்கூட ஆண்டு விழா
ஏரல் அருகே பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
ஏரல்:
ஏரல் அருகே உள்ள பெருங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பெருங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பொன்ராணி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெருங்குளம் பேரூராட்சி தலைவர் டாக்டர் புவனேஸ்வரி சண்முகநாதன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, பெருங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story