அரசு பள்ளி ஆண்டு விழாவில்-கருப்பசாமி வேடத்தில் வந்த மாணவர்


அரசு பள்ளி ஆண்டு விழாவில்-கருப்பசாமி வேடத்தில் வந்த மாணவர்
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை


சிவகங்கையை அடுத்த கண்டாங்கிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மந்தகாளை முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்று பேசினார். விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் திவ்ய பாரதி, கருப்பசாமி வேடத்தில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையொட்டி அவர் பள்ளியின் சற்று தொலைவில் உள்ள கருப்பசாமி கோவிலில் இருந்து உடுக்கை சத்தத்துடன் விழா நடைபெற்ற மேடைக்கு வந்தார். அவர் வருவதை பார்த்து விழாவை காண வந்த கூட்டத்தினர் சாமி ஆடினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து விளையாட்டு, படிப்பு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.


Next Story