பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:45 PM GMT)

குலசேகரன்பட்டினம் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் புனித ஜோசப் சேவியர் ஆர். சி. தொடக்கப்பள்ளியில் 85-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய இயக்குனர் பிரொமில்டன் லோபோ தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் விக்டர் லோபோ பேசினார். குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கணேசன், தலைமையாசிரியை டயானா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி வித்தியா, ஊர் தலைவர் லியோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப ்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஆசியை வசந்தி வரவேற்று பேசினார். ஆசிரியர் ரூஸ்வெல்ட் நன்றி கூறினார்.


Next Story