பள்ளி ஆண்டு விழா


பள்ளி ஆண்டு விழா
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:46 PM GMT)

சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி 91-வது ஆண்டு விழா நடைபெற்றது.

சிவகங்கை


சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி 91-வது ஆண்டு விழா சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி தலைமையில் நடைபெற்றது. பள்ளி செயலாளர் நடேசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். நகர் மன்ற உறுப்பினர் பாக்கியலட்சுமி விஜயகுமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ராமலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு "இளம் விஞ்ஞானி விருது" வழங்கப்பட்டது. மேலும், பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story