பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி


பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி
x

புதுச்சத்திரத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

நாமக்கல்

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் புதுச்சத்திரம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக மின்னாம்பள்ளி, தாளம்பாடி, செல்லப்பம்பட்டி உள்பட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள 177 குடியிருப்புகளில் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், புதுச்சத்திரத்தில் வட்டார மேற்பார்வையாளர் மகேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சிந்துஜா, செல்வராணி, மின்னாம்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கமணி, செல்லப்பம்பட்டி உதவி ஆசிரியர் செல்வம் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அதில் மின்னாம்பள்ளியில் பீகாரை சேர்ந்த தொழிலாளியின் 3 குழந்தைகள் தேங்காய் நார் தயாரிக்கும் ஆலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த குழந்தைகள் 3 பேரும் மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

1 More update

Next Story