காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடக்கம் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடக்கம் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் வருகிற ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொ), ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோரை கொண்டு கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

எனவே இந்த கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

மேலும் பொதுமக்கள் யாரேனும் பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை

Mail ID - dpckanchi@yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story