ஊதியம் வழங்க கோரி பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊதியம் வழங்க கோரி பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊதியம் வழங்க கோரி பள்ளி கல்வி அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பள்ளி கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாத ஊதியம் வழங்காததை கண்டித்தும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலக வளாகத்தில் இடைநிலை மற்றும் தொடக்ககல்வி ஆகிய அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் தனியாரிடம் கொடுத்து விட்டு ஊதியம் பெறுவதற்கு போராடும் நிலை ஏற்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story