பள்ளியில் வண்ணங்கள் தின விழா..!


பள்ளியில் வண்ணங்கள் தின விழா..!
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 4:48 PM IST)
t-max-icont-min-icon

சுரண்டை பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் தொடக்கப் பள்ளியில் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை நிறுவனர் சிவ பபிஸ்ராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வர் பொன் மனோன்யா, தலைமை ஆசிரியர் முருகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வண்ணங்களை மையமாக கொண்டு குழந்தைகள் பாடல் பாடி, நடனம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தாங்கள் கொண்டு வந்த வண்ண வண்ண பொருட்களை காட்சிப்படுத்தினர். அதனை கொண்டு செயல்விளக்கம் செய்து காட்டினர். மாணவன் பிரகலன் மற்றும் மாணவி விஷ்ணு பிரியா பேசினர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் விஜயலெட்சுமி, மஞ்சுளா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை மெர்சி, ஷகிலா மாணவர்களை ஒருங்கிணப்பு செய்தனர்.

1 More update

Next Story