பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்:தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்:தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தையல் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

சேலம்,

தையல் தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கே.கே.வலசு பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 25). தையல் தொழிலாளியான இவர் சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் தையல் கடை வைத்திருந்தார். இந்த நிலையில் வேலு கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றார்.

மாணவி கடத்தலுக்கு வேலுவின் நண்பரான ராசிபுரம் கீரனூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (27) என்பவர் உதவியாக இருந்தார். இதையடுத்து மாணவி கடத்தல் குறித்து அவரது பெற்றோர் மல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

10 ஆண்டுகள் சிறை

இதையடுத்து சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வேலு மற்றும் கடத்தலுக்கு உதவி புரிந்த பாண்டியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். பாண்டியன் விடுதலை செய்யப்பட்டார்.


Related Tags :
Next Story