பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்
வேலூர் அலமேலுமங்காபுரம் கண்ணன்நகரை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் ராஜஸ்ரீ (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story