முக்காணியில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை


முக்காணியில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முக்காணியில் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

முக்காணி குருவித்துறை நாடார் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மகள் மீனாட்சி (வயது 15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஓரளவு உடல் நிலை குணமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மீனாட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு வரை படித்து கொண்டு இருந்தாராம். உடல்நிலை சரியாகும்வரை இரவில் நீண்டநேரம் விழித்திருக்க வேண்டாம் என்று தந்தை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனவேதனை அடைந்துள்ளார். நேற்று காலையில் வீட்டில் சேலையால் தூக்கிட்டு தொங்யுள்ளார். அக்கம் பக்கத்தினரும், குடும்பத்தினரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story