மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில் பாடசாலை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில் பாடசாலை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
x

மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் மண்டபத்தில், பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் திருஞானசம்பந்தர் மண்டபத்தில், தேவாரம், திருவாசகம் பாடசாலை நடத்த மதுரை ஆதினத்திற்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருஞானசம்பந்தர் மண்டபத்தில் லட்டு தயாரித்து வழங்கப்பட்டு வரும் சூழலில், அங்கு தேவார பாடசாலை அமைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது, மண்டபத்தில் 291-வது மதுரை ஆதினம் பொறுப்பில் இருந்தவரை தேவார பாடசாலை நடத்தப்பட்டதாகவும், இடையில் அவை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதங்களுக்குள் இடமாற்றம் செய்ய கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். மேலும், தேவார பாடசாலை அமைக்கவும், மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Next Story