பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொற்கொடி முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியர் அகல்யா வரவேற்றார். பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். தேவையான கழிவறைகள் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாத்திமா பர்வீன், ஆசிரியர் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story