பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்


பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
x

திட்டச்சேரியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அஸ்கர் நிஷா தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு முன்னிலை வகித்தார். மேம்பாட்டுத் திட்டம் மூலம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க வேண்டும்., 200 -க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளது.எனவே கூடுதல் கழிவறைகள் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பர்வீன் பானு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளி ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.


Next Story