பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
திருக்கடையூரில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
மயிலாடுதுறை
திருக்கடையூர்:
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மைக்குழு துணைத்தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம் வரவேற்றார். ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருகிற கல்வியாண்டில் மாணவ, மாணவிகளை அதிக அளவில் சேர்ப்பது, இடையில் நின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story