பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பாபநாசம் அரசு ஆண்கள் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
தஞ்சாவூர்
பாபநாசம்;
பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் தலைவி முத்துலட்சுமி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், நீண்டநாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகளை பள்ளிக்கு வருகை புரியவைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான கழிவறை பழுது பார்த்தல், மிதிவண்டி நிறுத்தம், வகுப்பறை பழுது பார்ப்பு ஆகிய தேவைகளை நிறைவேற்ற பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு வழங்கியுள்ளது குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மணியரசன், உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story