பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்
பள்ளி மேலாண்மை குழுக்கூட்டம்
உடுமலை
உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்
பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியை சாவித்திரி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பள்ளியில் முதல் பருவம் முடிந்து 2-ம் பருவம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு பற்றியும், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் அனுப்ப வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெற்றோர்களின் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்ற அரசு பள்ளிகளை பற்றிய காணொளி பெற்றோருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.
கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாடல்கள் பாடியும், செயல்பாடுகளை செய்தும் காட்டினர். உதவி ஆசிரியர் கு.கண்ணபிரான் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கோகுலப்பிரியா உள்பட பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
---