பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறை
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மை குழு தலைவர் ரேவதி தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் செந்தில், மேலாண்மை குழு துணை தலைவர் மணியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஞானபிரகாசம் வரவேற்று பேசினார். இதில் பேச்சு போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வழங்குவது, பள்ளி எதிரில் உள்ள சாலையில் வேகத்தடை அமைத்ததற்கு ஊராட்சிக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






