பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி


பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
x
தினத்தந்தி 19 Aug 2023 9:15 PM GMT (Updated: 19 Aug 2023 9:16 PM GMT)

கிணத்துக்கடவில் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு


ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பாக பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி கிணத்துக்கடவு வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

பயிற்சியை கிணத்துக்கடவு வட்டார வள மைய மேற்பார்வை யாளர் ஹெரன் தொடங்கி வைத்தார். இதில், கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் பேசினார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்த அலுவலர்கள் பிரியதர்ஷினி, பிரேமா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் குழந்தைகளின் உரிமைகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பள்ளி மேலாண்மை குழு, பள்ளி மேம்பாட்டு திட்டம், அரசு பள்ளிகளுக்கு பங்களிக்கும் பிற துறைகள், நகர்ப்புற ஊரக உள்ளாட்சி அமைப்பு, பிரதிநிதிகளின் பொறுப்பு, கடமையும் ஆகியவை குறித்து விளக்கி கூறப்பட்டது.

பயிற்சியில் கிணத்துக்கடவு, செட்டிபாளையம், ஒத்தக்கால் மண்டபம், பெரிய நெகமம் ஆகிய 4 பேரூராட்சிகளை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் 32 பேர் கலந்து கொண்டனர்


Next Story