நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகள் உற்சாகம்


நாமக்கல் மாவட்டம் முழுவதும்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு  மாணவ, மாணவிகள் உற்சாகம்
x

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரிய, ஆசிரியைகள் வரவேற்றனர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் 950 அரசு பள்ளிகள், 306 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,256 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறைவணக்கத்துடன் வகுப்பு தொடங்கியது. தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜெயலட்சுமி மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கி, புத்தகம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பலூன் கொடுத்து வரவேற்றனர்

இதேபோல் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மரகதம் மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ரவி, பொருளாளர் ராஜன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மோகன், தில்லை சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் கோட்டை நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு பலூன் கொடுத்து வரவேற்றனர்.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம் வழங்கப்பட்டது. ஒருசில பள்ளிகளில் சீருடையும் வழங்கப்பட்டது. முதல் நாளான நேற்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின்படி மாணவர்களுக்கு நல்லோழுக்கத்திற்கான வகுப்புகள் நடத்தப்பட்டது. இது 5 நாட்கள் தொடரும் எனவும், நேற்று 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்து இருந்ததாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story