பள்ளி விளையாட்டு விழா


பள்ளி விளையாட்டு விழா
x

பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

திருச்சி

திருச்சி அதவத்தூரில் உள்ள செயின்ட் ஜோன் ஆப் ஆர்க் சர்வதேசப் பள்ளியில் 17 -வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி ஆனந்த், தாளாளர் நாகவேணி சந்திரசேகரன், பள்ளி முதல்வர் ஜெயந்தி ஆகியோர் கொடிகளை ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவர்களின் அணி வகுப்பு, பல்வேறு வகையான போட்டிகள், டிரில்,யோகா,சிலம்பம்,கராத்தே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் 1,000 மரக்கன்றுகளை வழங்கினர். இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story