பள்ளி விளையாட்டு விழா
பாவூர்சத்திரம் அருகே பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் அமைந்துள்ள ஜீவா மெட்ரிக்குலேசன் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராதா தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளை பள்ளி முதல்வர் கவிதா சாமுவேல் தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு கைப்பந்து, இடம் மாற்று ஓட்டப்பந்தயம், சாகச போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் சொரிமுத்து, தாளாளர் ராதா ஆகியோர் சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினர். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story