பள்ளிக்கூட விளையாட்டு விழா


பள்ளிக்கூட விளையாட்டு விழா
x

பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளிக்கூட விளையாட்டு விழா நடந்தது.

தென்காசி

பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 33-வது விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் ஆகியோர் கலந்து கொண்டனர். இறைவணக்க பாடலுக்குப் பிறகு பள்ளி கொடியை டாக்டர் ஜெஸ்லின் ஏற்றி வைத்தார். பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களிடமிருந்து ஒலிம்பிக் தீபத்தை பெற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றினர். மாணவ தலைவி ஜெயஸ்ரீ உறுதிமொழி கூற மாணவர்கள் தொடர்ந்து உறுதிமொழி எடுத்தனர். மாணவ துணைத்தலைவர் கவுசி வரவேற்றார். பெற்றோருக்கு தொடர் ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற டார்ஜிலிங் அணியினர் சுழல் கோப்பையை வென்றனர். விழாவில் பள்ளி மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் பிராம்டன் ரெத்தின பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தாளாளர் ஆர்.ஜே.வி. பெல் நன்றி கூறினார்.


Next Story