வேன் மோதி பள்ளி மாணவன் சாவு


வேன் மோதி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே வேன் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி

மாணவன்

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச்சேர்ந்தவர் சரபாலன்(வயது 43). பெயிண்டரான இவருக்கு நித்திஷ்பாலா(14), ஹரி பிரசாத்(11) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் நித்திஷ்பாலா அதே ஊரில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிபிரசாத் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் தினமும் சைக்கிளிலேயே பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

வேன்மோதியது

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வகுப்பு முடிந்ததும் அண்ணன்-தம்பி இருவரும் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் அவர்கள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த ஹரி பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான். லேசான காயத்துடன் உயிர் தப்பிய நித்திஷ்பாலா குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகச்சை பெற்று வருகிறான்.

பெற்றோர் கதறல்

விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த ஹரிபிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனது உடலை பார்த்து கதறி அழுது பார்க்க பரிதாபமாக இறந்தது. இந்த விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story