பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பலி
கோவை குனியமுத்தூரில் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்த போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
கோவை குனியமுத்தூரில் விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்த போது பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
மாணவன்
ஒடிசா மாநிலம் கன்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீமான் ஜலோ (வயது30). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.
இதற்காக குனியமுத்தூர் முத்துசாமி உடையார் வீதி பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவரது மகன் பாதல் (13) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் இவர்களது வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வந்தது.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது சிறுவன் பாதல் விநாயகர் சிலைக்கு மின்சார விளக்கு அலங்காரம் செய்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சிறுவன் பாதல் தூக்கி வீசப்பட்டு, வீட்டின் முன்பு இருந்த சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவன் பாதலை பரிசோதனை செயத டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.