கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்; தேடும் பணி தீவிரம்


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்; தேடும் பணி தீவிரம்
x

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்; தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆதித் ஹரிஹரசுதன் (வயது15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று திருவானைக்காவல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஆதித் ஹரிஹரசுதன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய ஆதித் ஹரிஹரசுதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story