கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x

பொள்ளாச்சி அருகே குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கோவை சாய்பாபா காலனியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். அவரது மகன் விஜயேந்திரன் (வயது 14), 8-ம் வகுப்பு மாணவன். அவர் தனது நண்பரான சபரிநாதன் என்பவரது வீட்டு நிகழ்ச்சிக்கு, குடும்பத்தினருடன் பொள்ளாச்சியை அடுத்த ஜலத்தூருக்கு நேற்று முன்தினம் வந்தார். இந்தநிலையில் விஜயேந்திரன் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குளிப்பதற்காக இறங்கினான். அந்த கிணறு தூர்வாரப்படாமல் இருந்ததால், சேறாக இருந்தது. இதற்கிடையே குளித்து கொண்டிருந்த விஜயேந்திரன் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினான். உடனே அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி, விஜயேந்திரனை பிணமாக மீட்டனர். இதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story