பள்ளி மாணவர்கள் சாதனை
வட்டார தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
திருவேங்கடம்:
தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டிகள் திருவேங்கடம் வட்டம் அ.கரிசல்குளம் பஞ்சாயத்து ஆலமநாயக்கர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர். மாணவர்கள் ஜூனியர் பிரிவில் சந்தன முத்து வைரவன், சீனியர் பிரிவில் பவேஷ், சூப்பர் சீனியர் பிரிவில் பிரகாஷ் தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவர்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
இதேபோல் பெண்கள் சூப்பர் சீனியர் பிரிவில் முத்துமலர் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று மாணவியர் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றார். வட்டார அளவில் சதுரங்கப் போட்டியில் ஜூனியர் பிரிவு ஹர்ஷத் கண்ணன் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் தாளாளருமான வெ.பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.