தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் தகுதி


தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் தகுதி
x

தேசிய, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கரூர்

இந்திய பள்ளி குழுமம் சார்பில் தமிழ்நாடு அளவில் திருநெல்வேலி மாவட்டத்தில் குராஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகிலன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று டெல்லியில் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பாக விளையாட தகுதி பெற்றுள்ளான். 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவர்கள் பிரதீஸ், ஜீவா ஆகியோர் தேசிய அளவில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் போட்டியில் தமிழ்நாட்டு அணி சார்பாக விளையாட தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்டோர் 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர் பரத்குமார், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவர் கிஷோர்குமார் ஆகியோர் 2-ம் இடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதுபோல மாவட்ட அளவில் கரூரில் நடைபெற்ற இறகு பந்து இரட்டையர் போட்டியில் மாணவர்கள் ஹரி, சண்முகபிரியன் ஆகியோர் 2-ம் இடம் பெற்றுள்ளனர். தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் ரவி, தனசிங்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, அமலா லெனின் இளவரசி, பன்னீர்செல்வம், ரோனி பிரபாகர், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Next Story