திருத்தணி அருகே டிரைவரை தாக்கி பள்ளி மாணவர்கள் அட்டூழியம்
திருத்தணி அருகே டிரைவரை தாக்கிவிட்டு பள்ளி மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை, நொச்சலி அத்திமாஞ்சேரிபேட்டை வழியாக கோணசமுத்திரம் வரை அரசு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. பஸ்சில் கண்டக்டராக குப்பைய்யா (வயது 50), டிரைவர் ஹேமாத்திரி (48) பணியில் இருந்தனர்.
கே.ஜி.கண்டிகை பஸ் நிறுத்தத்தில் 4 பள்ளி மாணவர்கள் பஸ்சில் ஏறினர். பஸ் காலியாக இருந்தும் மாணவர்கள் உள்ளே வராமல் படியில் ஆபத்தான முறையில் தொங்கியப்படி பயணம் செய்தனர். டிரைவர் ஹேமாத்திரி மாணவர்களை உள்ளே வரும்படி பலமுறை அழைத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஓட்டுனரை சராமரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் பேருந்துடன் வந்து புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story