பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்


பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
x

நெல்லையில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லையில் அரசு உதவிபெறும் தனியார் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மற்ற ஆசிரியர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story