பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்


பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் பிரசாரம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தேசிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் அருகில் பிரசார இயக்கம் நடைபெற்றது. பிரசாரத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் மாநில தணிக்கையாளர் அருளானந்தம், பிரசார செயலாளர் வடிவேல் முருகன், துணை தலைவர் யோகேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story