பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிப்பாளையம்:
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நாகை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கை திரும்ப பெற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பணி மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு நான்கு மாத காலமாக வழங்காத ஊதியத்தை வழங்க வேண்டும்.
11 அம்ச ேகாரிக்கைகள்
தொகுப்பூதிய ஆசிரியர் நியமனத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சித்ராகாந்தி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிவக்குமார், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.