பள்ளி வேன்- மோட்டார் சைக்கிள் மோதல் மின் ஊழியர் சாவு

பள்ளி வேன்- மோட்டார் சைக்கிள் மோதல் மின் ஊழியர் சாவு
x

பிரவீன் 

பூதலூர் அருகே தனியார் பள்ளிவேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சாவூர்

பூதலூர் அருகே தனியார் பள்ளிவேனும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

மின் ஊழியர்

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தர்மாம்பாள் நகரில் வசித்து வந்தவர் பிரவீன் (வயது23). மின் ஊழியர். இவர் கள்ளப்பெரம்பூரில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கள்ளப்பெரம்பூர் -பூதலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். சித்திரகுடி அருகே மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த தனியார் பள்ளி வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீனை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பூதலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story