ரெயில் மோதி பள்ளி மாணவி சாவு


ரெயில் மோதி பள்ளி மாணவி சாவு
x

கரூர் அருகே ரெயில் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

பள்ளி மாணவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி (வயது 15). இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் பள்ளி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மருதூர் கிராமத்திற்கு கனிமொழி வந்திருந்தார். நேற்று காலை 5.45 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.

ரெயில் மோதி சாவு

அப்போது சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரெயில் கனிமொழி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கனிமொழி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கனிமொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story