மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி


மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலி
x
தினத்தந்தி 13 July 2022 12:15 AM IST (Updated: 13 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி பலியானாள்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே மேடுகாரப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா. கூலித் தொழிலாளி. இவரது மகள் ரக்‌ஷனா (வயது 11). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமி குளிப்பதற்காக தனது வீட்டில் ஹீட்டரை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் அவளது கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் சிறுமி ரக்‌ஷனா மின்சாரம் தாக்கி பலியானார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story