சரக்கு ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று பள்ளிக்கு சென்ற மாணவிகள்
நாட்டறம்பள்ளி அருகே சரக்கு ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
பாதை வசதியின்றி அவதி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இயங்கி வருகிறது. பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.
தற்போது ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி- மள்ளானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பச்சூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரெயில் பெட்டிகளுக்கு நடுவில்...
இந்தநிலையில் நேற்று பச்சூர் ரெயில் நிலையத்தில் சிக்னலுக்காக சரக்கு ரெயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்கு குறித்து நேரத்தில் செல்வதற்கு வேறு வழியின்றி நின்று கொண்டிருந்த மாணவிகள் சிலர் சரக்கு ரெயில் பெட்டிகளுக்கு நடுவில் நின்று உயிரையும் பொருட்படுத்தாமல் பள்ளிக்கு சென்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ- மாணவிகளுக்கு மாற்றுப் பாதை பாதை அமைத்துததர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.