பள்ளிகளுக்கு இன்றும், 25-ந்தேதியும் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்றும், 25-ந்தேதியும் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடு செய்யும் வகையில் இன்றும் (சனிக்கிழமை), 25-ந்்தேதியும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளதால், பள்ளிகளுக்கு மாணவர்களின் வருவை குறைவாகவே இருக்கும். எனவே திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயா அறிவித்துள்ளார். இதைப்போல வருகிற 25-ந்தேதியும்(சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story