காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 7:15 PM GMT (Updated: 3 Oct 2023 7:16 PM GMT)

6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர்


6 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 2-ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

காலாண்டு விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 23-ந் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு கடந்த 27-ந் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் 28-ந் தேதியில் இருந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டு அக்டோபர் 9-ந் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு

6 முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை ஏற்கனவே அறிவித்தபடி நேற்று முன்தினத்துடன் காலாண்டு விடுமுறை முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து மாணவ-மாணவிகள் நேற்று காலை ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு 2-ம் பருவ பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.


Next Story