கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு
6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு மலர்கொடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு மலர்கொடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளன. மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரை வருகின்ற 14-ந் தேதியும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 12-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.
மலர்கொடுத்து வரவேற்பு
மயிலாடுதுறையில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகள் மீது பள்ளியின் வாயிலில் நின்ற ஆசிரியர்கள் மலர் கொடுத்தும், இனிப்புகள் வழங்கி நெற்றியில் சந்தனமிட்டும் உற்சாகமாக வரவேற்றனர்.
இதேபோல் மன்னம்பந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு பேனா, நோட்டு புத்தகங்கள், சாக்லேட் வழங்கி வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.